இந்தக் குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் தப்பிவிடக் கூடியதாகும்....

Scan the qr code to link to this page

ஹதீஸ்
விளக்கம்
மொழிபெயர்ப்பைக் காண
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள் : "இந்தக் குர்ஆனைப் பேணி கவனித்து வாருங்கள். ஏனெனில், முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் தப்பிவிடக் கூடியதாகும்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

"இந்தக் குர்ஆனைக் கவனித்து வாருங்கள்" என்றால் தொடர்ந்து ஓதி வாருங்கள் என்பதாகும், "ஏனெனில், முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் தப்பிவிடக் கூடியதாகும்". உள்ளத்தில் மனனமிட்டு வைத்திருக்கும் அல்குர்ஆனை நபியவர்கள் கயிற்றில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒட்டகத்திற்கு ஒப்பிட்டுள்ளார்கள். அல்லாஹ் தனது பேரன்பினால் இதனை மனனம் செய்யும் மகத்தான பாக்கியத்தை அருளியுள்ளான், அதனை ஓதி, மனனமிடுவதன் மூலம் கவனிப்பது அவசியமாகும். அல்குர்ஆன் மறந்துவிடாமலிருக்க தினமும் கவனித்து ஓதுவதற்காக குறிப்பிட்ட ஒரு பகுதியை வழமையாக்கிக் கொள்ள வேண்டும். இயல்பிலேயே மறந்தவருக்குப் பாதிப்பு ஏதும் கிடையாது. இருப்பினும் அல்லாஹ் மனனமிடும் பாக்கியத்தை அருளிய பின், கவனயீனம், அலட்சியம் காரணமாக மறந்தவருக்கு தண்டனை கிடைக்கலாம் என அஞ்சப்படுகின்றது. எனவே அது உள்ளத்தில் தரிப்பதற்காக அதனைத் தொடர்ந்து ஓதுவதன் மூலம் கவனிக்க வேண்டும். அத்துடன் அதன் சட்டதிட்டங்களை அமுல்படுத்தவும் வேண்டும். ஏனெனில் ஒன்றை அமுல்படுத்துவதால் அது பாதுகாக்கப்பட்டு, நிலைத்திருக்க வழி செய்யும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்குர்ஆனைத் தொடர்ந்து ஓதி, கவனித்துக் கொள்வதை ஊக்குவித்தல்.
  2. அல்குர்ஆனை மனனமிட்டவர் அதனைப் பல தடவைகள் ஓதுவதை வழமையாக்கிக் கொண்டால் அது உள்ளத்தில் பாதுகாக்கப்பட்டு, நிலைத்திருக்கும், இல்லாவிடில் அது மறதி ஏற்பட்டு, அவரை விட்டும் சென்று விடும், ஏனெனில் அது கட்டிவைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை விட வேகமாகச் செல்லக்கூடியதாகும்.

பிரிவுகள்

வெற்றிகரமாக அனுப்பப்பட்டது