உமது வீடுகளைக் கப்ருகளாக ஆக்கிவிடாதீர், ஷைத்தான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டிலிருந்து விரண்டோடுகின்றான்....

Scan the qr code to link to this page

ஹதீஸ்
விளக்கம்
மொழிபெயர்ப்பைக் காண
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார் : "உமது வீடுகளைக் கப்ருகளாக ஆக்கிவிடாதீர், ஷைத்தான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டிலிருந்து விரண்டோடுகின்றான்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

தொழுகை, குர்ஆன் ஓதல் போன்ற வணக்கங்கள் நடைபெறாத மண்ணறைகளைப் போன்று வீடுகளை ஆக்கி விட வேண்டாமென நபியவர்கள் தடுத்ததாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள். மண்ணறைகளில் தொழுவது செல்லுபடியாக மாட்டாது என்பதனாலேயே அவ்வாறான வணக்கங்கள் நடைபெறாத வீடுகளை மண்ணறைகள் எனக் கூறப்பட்டுள்ளது. ஸூரா பகரா ஓதப்படும் வீடுகளில் உள்ளவர்களை அந்த ஸூரா, மற்றும் அதன் படி செயல்படுவதன் பரகத் காரணமாக வழிகெடுக்க முடியாதென்பதால் அவ்வாறான வீடுகளிலிருந்து ஷைத்தான் ஓடுவிடுகின்றான் என நபியவர்கள் கூறுகின்றார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஸூரா பகராவின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது.
  2. ஷைத்தான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டிலிருந்து விரண்டோடுகின்றான், அதனை நெருங்க மாட்டான்.
  3. மண்ணறைகளில் தொழுவது கூடாது.
  4. பொதுவாக வணக்கங்கள், ஸுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுவது விரும்பத்தக்கது.

பிரிவுகள்

வெற்றிகரமாக அனுப்பப்பட்டது